இனியவளே!
உன்னிடம்
நான்
காதலை சொல்ல
பறித்த
ரோஜாதான்
எத்தனை சறுகாயிருக்கலாம்?
என் காதலை
காவியமாக தாங்கிய
தாள்கள்தான்
எத்தனை கிழிக்கப்பட்டுருக்கலாம்?
உன்னை
வர்ணித்து
கவி எழுத
தமிழிடம்
வார்த்தைகள் எத்தனை
கடன்பட்டுயிருக்கலாம்?
இதுவெல்லாம் இருக்கட்டும்.....!
உனக்கு மட்டும்
ஏன் இந்த சக்தி....?!
காதலை சொல்லுவதற்கு
முன்பே
அதை தடுக்கும்
உன் பார்வை;
***********************
இனியவளே!
என்னுடன்
கண்ணோடு கண்
பேசி
காதல் செய்ய
காதலி வருவாயா?
உயரத்தில்
கதிரவன்தான்
குடை பிடிக்க
காதல் செய்ய
காதலி வருவாயா?
நம்முடன்
தென்றல்தான்
துணைக்கு இருக்க
காதல் செய்ய
காதலி வருவாயா?
கைகள்தான் தொடாமல்
தொட்டு
காதல் செய்ய
காதலி வருவாயா?
இதுவெல்லாம் வேண்டாம்
காதலன்
நீதான் என்று
காதலை சொல்ல
காதலி வருவாயா?
***********************
இனியவளே!
சிரித்துக்
கொண்டே
என்னை
அழ வைக்கிறாயே...!
ஏன்
காதலித்து
கொண்டே
என்னை
வாழ வைக்கலாமே....!!!!
**********************
இனியவளே!
கதிரவன் தான்
காலையில்
விழிக்காமல்
இருந்தாலும்;
உயிரிகள்தான்
உறக்கம்
தெளியாமல்
இருந்தாலும்;
தென்றல்தான்
இதம்
தராமல்
இருந்தாலும்;
நான்
உன் நினைவு
இல்லாமல் இருக்க மாட்டேன்!!!
********************
இனியவளே!
ஒற்றைக்காலில்
நிற்கும்
ரோஜாவை
பறித்து,
அதை
ஊனப்படுத்தி
உன்னிடம்
கொடுத்து
வந்த காதல்
பின்பு
என் மனதை
ஊனப் படுத்தி விடுமா?
நீ என் காதலை மறுப்பதால்...!
ரோஜாவும் முள்ளும்
ஒன்றாகதான் உள்ளது;
அது காதலாகாதுதான்!
நிலவும் மேகமும்
ஒன்றாகதான் உள்ளது;
அது காதலாகாதுதான்!
ஆனால்
எனக்கும் உனக்கும்
காதல் இல்லை
என்று கூறாதே!!!
***********************
யவளே!
தென்றலே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?
அவள் இல்லாமல்
நீயும் சுடுகிறாயே!
சூரியனே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?
அவள் இல்லாமல்
என் பொழுது விடிய வில்லையே!
நிலவே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?
அவள் இல்லாமல்
உன்னையும் பிடிக்கவில்லையே!
நதியே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?
அவள் இல்லாமல்
உன் ஓட்டம்தான் பிடிக்கவில்லையே!
நீங்களாவது
அவளிடம்
என் காதலை சொல்லுவீர்களா?
ஏனென்றால்
அவள் விழியை
பார்த்த பின்
என் காதலைதான்
மறைத்து விடுகிறேனே..............!
*******************
இனியவளே!
உன்னை
வர்ணித்து
கவிதை எழுதி தந்தேன்;
அதை
படித்த
நீ என்னை
விரும்பாமல்
கவிதையை விரும்பினாய்;
உனக்கு தெரியுமா?
உன்னை
உயிருக்குயிராய்
விரும்புவது
கவிதை அல்ல....!
நான்தான்....!
உன் விழியை
கூர்மையானது
என்றேன்;
தவறாகிவிட்டது
ஏனென்றால்
உன் விழி
என் இதயத்தையே
கிழித்து விட்டது
**********************
நீ
என்னைத் தேடி
வருகிறாய்
நான்
நீயாக மாறி
என்னைத்
தேடுகிறேன்
********************
நடைபயிலும்
குழந்தையாய்
வருகிறாய்
தாயாய் என்
கவனம் எல்லாம்
உன் மேல்
******************
நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்
என்பதை
ரசிப்பதற்காகவே
நான் தொலைந்து
போகலாம்
*****************
நீ
வந்தவுடன்
கை கொடுப்பதா
கன்னம் கொடுப்பதா
என்ற குளப்பத்தை
சாதுரியாமாய்
தீர்த்து வைத்தாய்
கைகூப்பி
வணக்கம் சொல்லி
*******************
உன்
தாவணிக்கு
எப்போது
என் தாயின்
கைவிரல்கள்
முளைத்தது
தடவியதும்
குழந்தையாய்
உறங்கி விட்டேனே
****************
என்னை பிரிந்த என் தாய்
படும் துயறை..........
நான் உன்னை பிரிந்து
கண்டுகொண்டேன்.............
****************************
என் கல்லறையில் பூக்கள்
தூவாதே...
மலர்ச்செடி ஒன்றை
நட்டுவிட்டு போ...
அவை
பூக்கள் உதிர்க்கும்போதெல்லாம்
நீ கண்ணீர் சிந்துவதாய்
ஆறுதல்கொள்வேன்.....
****************************
சிலந்தியால் உன்னை சிறைவைக்க நினைத்து
மனதினால் உன்னை மறைத்து வைத்தேன்
சிறகுகள் முளைத்து பறந்து விட்டாய்......
**************************
முன்றுமணிநேர
தொலைபேசி பேச்சுக்கு
முற்றுப்புள்ளியாய்
ஒரு முத்தம் கேட்டேன்
முற்றுப்புள்ளி ஏனோ
காற்புள்ளியானது...
அந்த இரவிலே.................
*************************
சூரிய வெளிச்சத்தைப் பார்த்தால் பூக்கள் சிரிக்கும்
பூக்களை பார்த்ததும் சூரியன் சிரிக்கும்
பாவம் அதற்குத் தெரியாது....! தன்னை
சுட்டெரிக்கப் போவது சூரிய ஒளிதான் என்று
அது போலத்தான்......
என்னைப் பார்த்து நீ சிரித்தாய்
உன்னைப் பார்த்து நான் சிரித்தேன்
அப்போது தெரியவில்லை எனக்கு
என்னை சுட்டெரிக்கப் போவது நீ தான் என்று..............
**************************
************************
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கானநட்பை.........
***********************
எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல் இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது
எப்படி உன்னை மறக்கமுடியும்…….
********************
உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…..
*********************
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…
********************
ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…...
*******************
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்குஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?????
******************
நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும்
சொல்
உனக்கும்
சேர்த்து நானே
காதலிக்கிறேன்…....
*****************
நமக்கு பிடித்த பாடல்
தேநீர் கடையில்
ஓடி கொண்டிருக்கிறது
கடைசி பேருந்ததையும்
விட்டு விட்டு
கேட்டு கொண்டிருக்கிறது
காதல்…
****************
என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…
****************
எனக்கு மட்டு மல்ல
கடைசியில் உனக்கும்
கிடைக்காமலே போய்விடும்
உன் காதல்….
****************
வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….
***************
மன்னித்து விடு
நான் உன்னை
மறக்க மறந்துவிட்டேன்…
**************
உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……
**************



















































.jpg)
.jpg)