ஆயிரத்தில் நான் ஒருவன்
ஆயிரத்தில் நான் ஒருவன் நீங்கள் ஆணையிட்டால் படைத் தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்தபின்
ஏழையின் பூமுகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்
(ஆயிரத்தில்)
அரசனாகட்டுமே அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கட்டுத் தடுப்பேன் தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வைத்துளி நிலத்தில் வீழ்வதற்குள்
உழைத்த மக்களுக்குக் கூலிவாங்கிக் கொடுப்பேன் உண்மைக்குக் காவல் இருப்பேன்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துனிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்
(ஆயிரத்தில்)
புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன் சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
வாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் உண்மைகள் தெளியட்டுமே
இனி எழுஞாயிறு எழுக இந்த இருள் கூட்டங்கள் ஒழிக
பழைய பகை படையெடுத்தால் கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக
(ஆயிரத்தில்)
இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே
(இன்னிசை)
கண் இல்லையென்றாலும் நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே
(இன்னிசை)
உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே
(இன்னிசை)
0 Responses to ஆயிரத்தில் நான் ஒருவன்
Something to say?